×

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ரூ.2000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18சதவீத ஜிஎஸ்டி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்ததால் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, போன் பே, ஜி பே மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...