×

ஐநா கூட்டத்தில் செப்டம்பர் 26ல் மோடி உரை

ஐக்கிய நாடுகள் சபை: ஐநா வெளியிட்டுள்ள தற்காலிக பட்டியலில் பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 26ம் தேதி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் உயர்மட்ட பொது விவாதம் வரும் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்க உள்ளது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் தற்காலிக பேச்சாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டியல் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என ஐநா தெரிவித்துள்ளது. விவாதத்தில் பாரம்பரிய வழக்கப்படி, வரும் 24ம் தேதி முதல் பேச்சாளராக பிரேசில் பங்கேற்கு உயர்மட்ட அமர்வு தொடங்கி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் உரையாற்றுவார். கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2021 செப்டம்பரில் ஐநா பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

The post ஐநா கூட்டத்தில் செப்டம்பர் 26ல் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : Modi ,Aina ,United Nations ,UN ,General Assembly ,Aina General Assembly ,Aina meeting ,Dinakaran ,
× RELATED திறன் மேம்பாடு குறித்து சிங்கப்பூர்...