×

கர்நாடக மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல்லில் இருந்து சென்ற எல்பிஜி டேங்கர் லாரி அடித்துச் செல்லப்பட்டது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல்லில் இருந்து சென்ற எல்பிஜி டேங்கர் லாரி அடித்துச் செல்லப்பட்டது. கேஸ் டேங்கர் லாரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் கங்கவாலி ஆற்றுக்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் உத்தர கர்நாடக மாவட்டம் ரங்கோலா அருகே உள்ள ஷிரூரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் 3 டேங்கர் லாரிகள் சிக்கின. நிலச்சரிவில் சிக்கி கங்காவாலி ஆற்றங்கரையோரம் இருந்த வீடு ஒன்றும் மண்ணில் புதைந்தது. வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர்.

The post கர்நாடக மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல்லில் இருந்து சென்ற எல்பிஜி டேங்கர் லாரி அடித்துச் செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Karnataka ,BENGALURU ,Gangavali river ,Uttara ,Dinakaran ,
× RELATED கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் பள்ளி...