- அல்கரேஸ்
- ஜோகோவிக்
- லண்டன்
- கார்லோஸ் அல்கராஸ்
- விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்
- செர்பியா
- நோவாக் ஜோகோவிக்
- அல்கராஸ்
- தின மலர்
லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பரபரப்பான பைனலில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் (37 வயது, 2வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் (21 வயது, 3வது ரேங்க்) 6-2, 6-2 என முதல் 2 செட்டையும் மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
3வது செட்டிலும் அவர் 5-4 என முன்னிலை வகித்த நிலையில், 3 சாம்பியன்ஷிப் பாயின்ட்களை தவிர்த்த ஜோகோவிச் கடுமையாகப் போராடியதால் டை பிரேக்கர் வரை ஆட்டம் இழுபறியாக நீடித்தது. அதில் அதிரடியாக விளையாடிய அல்கராஸ் 6-2, 6-2, 7-6 (7-4) என நேர் செட்களில் வென்று தொடர்ந்து 2வது முறையாக விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
இது அல்கராஸ் வென்ற 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக அவர் 2022 யுஎஸ் ஓபன், 2023 விம்பிள்டன், 2024 பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஒரே சீசனில் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வெல்லும் சாதனையை நிகழ்த்திய 6வது வீரர் என்ற பெருமையும் அல்கராசுக்கு கிடைத்துள்ளது. 8வது முறையாக விம்பிள்டனிலும், 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய அனுபவ வீரர் ஜோகோவிச் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார்.
The post அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் appeared first on Dinakaran.