×

காது கேளாத மாணவர்களுக்கான கல்விக்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: காது கேளாத மாணவர்களுக்கான கல்வி அணுகலை மேம்படுத்தும் வகையில், இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் யுனிக்கீ என்ற சமூக அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யுனிக்கீ என்பது சமூக சேவை அமைப்பாகும். சைகை மொழியில் காது கேளாதவர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இந்த நிறுவனம் அளிக்கிறது.

இந்த நிலையில், காது கேளாத மாணவர்களுக்கான கல்வி அணுகலை அதிகரிக்கும் வகையில், இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும் யுனிக்கீ அமைப்பும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் காது கேளாத 10,000 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

The post காது கேளாத மாணவர்களுக்கான கல்விக்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Indian Sign Language Research and Training Center ,Unikey ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...