×

பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

 

தொண்டி, ஜூலை 12: தொண்டி அரசு மேற்கு தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார்.

பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிப்பதால் கூடுதல் கட்டிடம் கட்டவும், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த கூடுதல் முயற்சி செய்யவும், போதிய ஆசிரியர்கள் நியமனம் செய்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

The post பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Parent Teacher Association ,Thondi ,Thondi Government ,West Primary ,School ,Principal ,Shanti ,President ,Jayanthan ,Dinakaran ,
× RELATED புதுமைப்பெண்… தமிழ்ப்புதல்வன்…. நான்...