×

சென்னை பாம்பன் சுவாமி கோயில்: குடமுழுக்கு நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. குடமுழுக்கு நடைபெற்று 66 ஆண்டுகளும் பாலாலயம் செய்து 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் குடமுழுக்கு நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயிலில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

The post சென்னை பாம்பன் சுவாமி கோயில்: குடமுழுக்கு நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : BOMBAN SWAMI TEMPLE ,CHENNAI ,SUPREME COURT ,Kudaroo ,Thiruvanmiur Bomban Swami Temple ,Chennai High Court ,Chennai Bomban ,Swami Temple ,Ban Kudaroo Temple ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...