×

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது எனத் தகவல்

மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஷிப் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசி-யிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

2025ம் ஆண்டின் துவக்கத்தில் பாகிஸ்தானில், மினி உலகக்கோப்பை எனப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய அணி பாகிஸ்தானில் சென்று போட்டிகளில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்நிலையில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐசிசியிடம் இந்தியாவிற்கான போட்டியை துபாய் அல்லது இலங்கையில் நடத்த வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் இரு நாடுகளிலேயும் நேரடியாக நடைபெறவில்லை. சர்வதேச போட்டிகள் பொதுவான நாடுகளில் நடத்தப்படும். ஏற்கனவே ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றபோது இந்திய அணிக்கான போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டது.

இந்த சூழலில் 2025ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள இந்திய அணிக்கான போட்டிகள் துபாய் மற்றும் இலங்கையில் நடத்த வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

The post அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது எனத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian ,Pakistan ,ICC Champions Cup series ,Mumbai ,cricket ,ICC Champions Cup ,ICC Champions Trophy ,Championship Trophy Series ,Dubai ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் திறக்கப்பட்ட வேகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஷாப்பிங் மால்!