×

தங்கம் வென்றார் பிரவீன் குமார்

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில், இந்திய வீரர் பிரவீன் குமார் (2.08 மீட்டர்) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். அமெரிக்காவின் டெரக் லாக்சிடென்ட் (2.06 மீ.) வெள்ளி, உஸ்பெகிஸ்தானின் கியாஸோவ் டெம்ர்பெக் (2.03) வெண்கலம் வென்றனர். நொய்டாவை சேர்ந்த பிரவீன் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.n பாரா ஒலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு ஹர்விந்தர் சிங் (வில்வித்தை, தங்கம்), பிரீத்தி பால் (மகளிர் 100 மீ., 200 மீ. 2 வெண்கலம்) தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிப்பார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் கேப்டன்/பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 5 சீசனில் (2011-15) ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் ஆண்கள் ஹாக்கி போட்டி சீனாவில் நாளை தொடங்குகிறது. சீன தைபே ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா/ தனிஷா இணை 20-22, 12-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் தீராரா சகூல்/முயூன்வோங் இணையிடம் போராடி தோற்றது.

 

The post தங்கம் வென்றார் பிரவீன் குமார் appeared first on Dinakaran.

Tags : Praveen Kumar ,India ,Paris Paralympics ,Derek Laxident ,Uzbekistan ,Giyazov Demrbek ,Dinakaran ,
× RELATED பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு...