×
Saravana Stores

பாரிஸ் பாராலிம்பிக்; 30 பதக்க இலக்கை இன்று இந்தியா எட்டுமா?

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்காக 17வது பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. கடந்த முறை 19 பதக்கங்களை வென்ற நிலையில் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றிலேயே அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது. இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களை வென்றுள்ளது. இன்று 30வது பதக்க இலக்கை தொடர வாய்ப்பு உள்ளது.

இன்று ஆண்கள் ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதி சுற்றில் திபேஷ் குமார், ஆண்கள் உயரம் தாண்டுதல் டி64 இறுதிப் போட்டி பிரவீன் குமார், பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 46 இறுதிப் போட்டியில் பாவனாபென், அஜபாஜி சௌத்ரி, ஆண்களுக்கான ஷாட் புட் எப்57 பைனலில் சோமன் ராணா மற்றும் ஹோகடோ ஹோடோஷே செமா, பெண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பாரா பவர் லிஃப்டிங்கில் இறுதி போட்டியில் கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் களம் காண்கின்றனர். இதில் பலரும் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. பாராலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முதல் 12 நாடுகளில் இடம்பிடிக்க இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.

The post பாரிஸ் பாராலிம்பிக்; 30 பதக்க இலக்கை இன்று இந்தியா எட்டுமா? appeared first on Dinakaran.

Tags : Paris Paralympics ,India ,Paris ,17th Paralympic series ,Paralympic ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…