×

121 பேர் பலியான ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கு ஏற்பாட்டாளர்களே காரணம்: சிறப்பு குழு அறிக்கை தாக்கல்

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராசில் நடந்த கூட்டத்தில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என்று சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராசில் கடந்த 2ம் தேதி ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் போலோ பாபா பங்கேற்றார். அளவுக்கதிகமான கூட்டத்தினால் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்கு அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது.

இந்த குழு நேற்று தனது அறிக்கையை உத்தரப்பிரதேச அரசிடம் சமர்பித்துள்ளது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மாவட்ட கலெக்டர், எஸ்பி உட்பட 132 பேரின் வாக்குமூலங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 121 பேர் உயிரிழந்ததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம். கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் சரிவர செய்யவில்லை. உள்ளூர் காவல்துறையும், நிர்வாகமும் இந்த நிகழ்வை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ”என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் போலோ பாபா பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் அறிக்கையின் அடிப்படையில் 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post 121 பேர் பலியான ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கு ஏற்பாட்டாளர்களே காரணம்: சிறப்பு குழு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Hadhras ,stampede ,Special Investigation Committee ,Hadhras, Uttar Pradesh ,Hadhras of Uttar Pradesh ,Bolo Baba ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்க வைக்க...