×

தண்ணீர் தொட்டி அமைப்பு

போச்சம்பள்ளி, ஜூலை 9: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பேருஅள்ளி கிராமத்தில் உள்ள பிரிவு சாலையில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த இரு ஆண்டுக்கு முன்பு பேருஅள்ளி பிரிவு சாலையில் ₹75 ஆயிரம் மதிப்பில் தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதக்காக சிமென்ட் மேடை அமைக்கப்பட்டது. ஆனால், தொட்டி அமைக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு பரிதவிக்கும் நிலை காணப்பட்டது. பேருஅள்ளி மக்களின் தாகத்தை தீர்க்க, தொட்டி அமைக்க வேண்டுமென கடந்த மாதம் “தினகரன்’’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியில் அதிகாரிகள் தற்போது தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்துள்ளனர். இதனால், பேருஅள்ளி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post தண்ணீர் தொட்டி அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Berualli ,Kaveripatnam ,
× RELATED அழிவின் பிடியில் ஆதிக்கலை;...