×

இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கணவர், மாமியார் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, செப்.6: காவேரிப்பட்டணம் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கத்தேரி முருகன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வடிவேலன் (36). இவரது மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு கடந்த 7 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில், வடிவேலன் மற்றும் அவரது தாய் கன்னியம்மாள் ஆகியோர் சத்தியபிரியாவிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக பணம், நகை வாங்கி வரும்படி கூறி கொடுமை செய்துள்ளனர். மேலும், பணம் -நகை வாங்கி வராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் சத்யபிரியா புகாரளித்தார். அதன்பேரில், வடிவேலன் மற்றும் கன்னியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கணவர், மாமியார் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kaveripatnam ,Vadivelan ,Katheri Murugankottai ,Krishnagiri district ,Satyapriya ,
× RELATED காவேரிப்பட்டணம் சார் பதிவாளர்...