×

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

கிருஷ்ணகிரி, செப்.4: 17வயது சிறுமியை திருமணம் செய்த கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி கோனகவுண்டனூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, பிளஸ்2 படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அன்பு (24) என்பவருக்கும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேப்பட்டி அம்மனேரி பெருமாள் கோயிலில் திருமணம் நடந்தது. இந்த குழந்தை திருமணம் பற்றி தகவல் அறிந்த, வேப்பனஹள்ளி வட்டார குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முனியம்மாள், இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அன்பு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Veppanahalli Konakoundanur ,Krishnagiri district ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது