திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அந்தரப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். வளையல் வியாபாரி. இவரது மனைவி கீதா(44). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த கீதாவுக்கும், முசிறி அடுத்த வாளவந்தி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசந்திரனுக்கும் (64) பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலானது. இந்நிலையில் பாலசந்திரனிடம் பேசுவதை கீதா திடீர் என நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலசந்திரன், கீதாவை சந்தித்து தன்னிடம் பேசும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை கீதாவின் வீட்டுக்கு வந்த பாலசந்திரன், அவரிடம் தன்னிடம் பேசும்படி வற்புறுத்தியதால் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்திரன், அரிவாளை எடுத்து கீதாவை சரமாரி வெட்டிவிட்டு டூ வீலரில் தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கீதாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். போலீசில் சரணடைய புறப்பட்ட பாலச்சந்திரன், அ்ங்குள்ள டீக்கடையில் டீக்குடித்துக்கொண்டிருந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் (55) என்பவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் ரத்தகரை அரிவாளுடன் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் பாலசந்திரன் சரணடைந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், கள்ளக்காதலி பேச மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டி கொன்றவர், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ரமேஷிடம் அதை அகற்றும்படி பலமுறை கூறியும் அகற்றாததால் ரமேசையும் வெட்டி கொன்றுள்ளார் என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பாலசந்திரனை கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் 15 வருடம் சிறையில் இருந்த தொழிலாளி
காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்த கொலையாளி பாலசந்திரன், கடந்த 2003ல் இரட்டை கொலை வழக்கில் 15 வருடம் சிறை தண்டனை பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளியில் வந்தார். குடும்பம் இன்றி தனியாக வசித்து வந்த பாலசந்திரன், முசிறி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்ததோடு, மீண்டும் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண் appeared first on Dinakaran.