×
Saravana Stores

விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

 

திருவள்ளூர் : வருகிற 10ம் தேதி (நாளை) விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தகவல் தொழல்நுட்ப நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காமல் தொழிலாளர்களை வாக்கு அளிக்க அனுப்பாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருவள்ளூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) – 7299007334, தொழிலாளர் துணை ஆய்வாளர் – 9791078512, திருவொற்றியூர், தொழிலாளர் துணை ஆய்வாளர் – 9597577599 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் ஷோபனா தெரிவித்துள்ளார்.

The post விக்கிரவாண்டி தொகுதியை சார்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vikrawandi ,Tiruvallur ,Vikravandi ,Tiruvallur district ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...