திருப்பூர், ஜூலை 8: திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் அருகே நடுவழியில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் – பெருமாநல்லூர் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகே கிரானைட் கற்களை ஏற்றிய லாரி புஷ்பா ரவுண்டானா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று நள்ளிரவில் புதிய பேருந்து நிலையத்தை கடந்து வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரி பழுதாகி நடுவழியில் நின்றது. லாரி ஓட்டுநர் லாரியை சரி செய்ய முயன்றார்.
இருப்பினும் அவரால் சரி செய்ய முடியாததால் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒர்க் ஷாப் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டது. லாரியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பின்னர் லாரி அங்கிருந்து கிளம்பி சென்றது. மிக முக்கியமான சாலையில் பழுதாகி நின்ற லாரியால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post புதிய பேருந்து நிலையம் அருகே நடு வழியில் பழுதான லாரி; போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.