- ஆடி
- திருத்தணி
- சென்னை
- திருத்தணி முருகன் கோயில்
- ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா
- இறைவன்
- முருகன்
- ஆதி கிருத்திகை
சென்னை, ஜூலை 7: திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து முருகப்பெருமானை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா வரும் 27ம் தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கி, 28ல் ஆடிபரணியை தொடர்ந்து 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு சரவண பொய்கை திருக்குளத்தில் முதல்நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். தொடர்ந்து 3 நாட்கள் தெப்பத்திருவிழாவில் உற்சவர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நிலையில், திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் மலைக் கோயில் மாட வீதியில் சுவாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக நிழற்குடைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ஆடிக்கிருத்திகை விழா முன் ஏற்பாடுகள் தொடங்கி பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
The post திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம் appeared first on Dinakaran.