×

மயிலாடியில் சிற்பத் தொழிலுக்கு கற்கள் கிடைக்க வலியுறுத்தல்

அஞ்சுகிராமம், ஜூலை 7: குமரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் டாக்டர் கில்மன் புரூஸ் எட்வின் கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது. மயிலாடி பேரூராட்சி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல் சிற்பக் கூடங்கள் உள்ளன. இங்கு சுமார் 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த கல் சிற்ப தொழிலுக்கு அடிப்படையான கற்கள் கிடைப்பதிலும், கொண்டு வருவதிலும் மிகுந்த சிரமம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆகவே இந்த மயிலாடி சிற்பக் கலைக் கூடங்களுக்கு கற்கள் கிடைக்திட ஆவன செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மயிலாடியில் சிற்பத் தொழிலுக்கு கற்கள் கிடைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mailadi ,Anjugram ,Kumari East District ,Dr. ,Gilman Bruce Edwin ,Mailadi Municipality ,
× RELATED மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளியில் மன...