×

குஜராத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்தது: 5 பேர் கதி என்ன?

சூரத்: குஜராத்தின் சூரத்தில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விழுந்ததில் 15 பேர் காயமடைந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தின் சூரத் மாவட்டம் சச்சின் பாலி கிராமத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில், அங்குள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று திடீரென சீட்டுக்கட்டு போல் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்த சமயத்தில் 5 வீடுகளில் சிலர் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்ததும் போலீசார் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.சூரத் மாவட்ட கலெக்டர் சவுரப் பர்தி கூறுகையில், ‘‘இடிபாடுகளில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணி நடக்கிறது. 4 அல்லது 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். விரைவில் அவர்களை மீட்கும் பணி நடக்கிறது’’ என்றார்.

சிக்கியவர்கள் இடிபாடுகளில் இருந்து உதவி கேட்கும் சத்தம் வெளியில் கேட்பதால் எளிதில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புப்படையினர் கூறி உள்ளனர். இந்த விபத்தில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடிந்த கட்டிடம் கட்டி 8 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. ஆனாலும் அந்த கட்டிடம் பாழடைந்து இருந்ததால் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 30 குடியிருப்புகளில் 5 வீடுகளில் மட்டுமே மக்கள் வசித்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post குஜராத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்தது: 5 பேர் கதி என்ன? appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Surat ,Surat, Gujarat ,Sachin Pali ,
× RELATED நீர் சேமிப்பு என்பது ஒரு முயற்சி நீர்,...