×

உடன்குடியில் வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம்

உடன்குடி,ஜூலை6: உடன்குடி வெற்றிலை விவசாயிகள் சங்க மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கதலைவர் மகராஜன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் சற்குணராஜ் வரவேற்றார். செயலாளர் மங்களராஜ் சங்க வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். மூத்த உறுப்பினர் ஜெயபாண்டியன் தேர்தல் அதிகாரியாக இருந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார். இதில் நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான காலி நிலங்களில் தங்களால் முடிந்தளவு வெற்றிலை பயிர் செய்ய வேண்டும், வெற்றிலை பயிரிடும் விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும், வெற்றிலை தாம்பூலத்தின் பயன்பாடுகளை அரசு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோபால் நன்றி கூறினார்.

The post உடன்குடியில் வெற்றிலை விவசாயிகள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Betel ,Association ,Ebengudi ,Mahasabha ,Sangha ,Maharajan ,Sangh Treasurer ,Charkunraj ,Mangalaraj ,Jayapandian ,Betel Farmers Association ,Ekhundudi ,Dinakaran ,
× RELATED ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்