×

வரும் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நேபாள பிரதமர்

காத்மாண்டு: நேபாள பிரதமர் பிரசந்தா வரும் 12ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்து உள்ளார். நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால்,ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரசந்தா, பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் பிரசந்தா வரும் 12ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற செயலகத்துக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் பிரசந்தா, இதுவரை 4 முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உள்ளார்.

The post வரும் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நேபாள பிரதமர் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Prashanth ,Parliament ,Nepal Communist Party ,Maoist Center ,Communist ,Nepali ,Dinakaran ,
× RELATED நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது