×

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி..!!

பிரிட்டன்: பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார். இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இதில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. 14 ஆண்டுகளாக பிரிட்டனை வழிநடத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவியது. இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4வது இடத்தைப் பெற்றார். இவர் ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

The post பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Uma Kumaran ,Labour Party ,UK general election ,Britain ,London Stratford ,British ,election ,Conservative Party ,Rishi Sunak ,UK ,Sunak ,
× RELATED முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!