×
Saravana Stores

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை, அண்ணா நகர் சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள அண்ணா நகர், சமத்துவபுரம் பகுதியில் கால்வாய் பணி பாதியில் இருக்கிறது. வீடுகளின் முன்பும் கால்வாய் பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளது.

பாலாற்று குடிநீர் நீரேற்றம் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் நிறைந்து இருக்கின்றன. எனவே, பணிகளை முடிக்காமல், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கால்வாய்களை கணக்கெடுத்து, மழைநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். அப்பகுதியில் மழைக்காலங்களில் மழை வெள்ளம் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாவதை தடுக்க, உடனடியாக கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Orikai Samathuvapuram ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram Orikai, ,Anna Nagar Samathuvapuram ,Anna Nagar ,Orikai ,Kanchipuram, Samathuvapuram ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம்