×

கிள்ளியூரில் குற்றவியல் நீதிமன்றம் அமைச்சர் ரகுபதியை சந்தித்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ நன்றி

கருங்கல், ஜூலை 2 : ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முயற்சியால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கடந்த 19-02-2019 -ல் புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டது. கிள்ளியூர் தொகுதிக்குட்பட்டு கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. கிள்ளியூர் தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டதால் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். ஆனால், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குள் நீதிமன்றம் இல்லாததால் மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து இரணியல், குழித்துறை போன்ற நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனையடுத்து ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கிள்ளியூரில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க கேட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் பலமுறை முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தார்.

The post கிள்ளியூரில் குற்றவியல் நீதிமன்றம் அமைச்சர் ரகுபதியை சந்தித்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ நன்றி appeared first on Dinakaran.

Tags : Rajeshkumar MLA ,Minister of Criminal Court ,Raghupathi ,Killiyur ,Karungal ,Rajesh Kumar MLA ,Gilliyur taluka ,Gilliyur ,Pudukadai ,Nithravalai ,Kollangode ,
× RELATED ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில்...