×

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை  மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நாமக்கல் ஈரோடு உட்பட 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீடு, அலுவலகம், மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்கள் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 06.30 மணி முதல் சோதனை மேற்கொண்டுள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல முறைகேடான முறையில் சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெவெளியாகியுள்ளன. குறிப்பாக சென்னை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒலிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 150 மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர், அவரது உறவினர்கள், அவரது பினாமி கள் வீடு என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனையானது நடைபெறுகிறது.இந்த சோதனையின் முடிவிலேயே எவ்வளவு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர், என்னென்ன ஆவணங்கள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவரும். இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் தங்கமணின் அவரது மனைவி சாந்தி, மற்றும் மகன் தரணீதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறதுலஞ்சஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகும் 5- வது முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவார், ஏற்கனவே வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  நடத்தியுள்ளது….

The post முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு appeared first on Dinakaran.

Tags : former ,minister ,Thangmani ,Chennai ,Former Supreme Minister ,Thangamani ,Former Minister ,Thangani ,
× RELATED அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதா?...