×
Saravana Stores

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்


திருமலை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கொண்டகட்டு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று மதியம் தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். பவன் கல்யாண் எந்த ஒரு பணியை தொடங்கினாலும் இந்த கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம். தேர்தலுக்கு முன்பு தனது பிரச்சார வாகனமான வாராகி யாத்திரை வேனுக்கு இங்கு முதலில் பூஜை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தற்போது மீண்டும் வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏற்கனவே தனது வீட்டில் 11 நாட்கள் வாராகி பூஜை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் வருகையை ஒட்டி ஜகித்தியலாவில் அவரது ரசிகர்கள் திரளாக திரண்டு வந்தனர். கூட்டத்திற்கு மத்தியில் காரில் நின்றபடி பயணித்து அவர்களின் வரவேற்பை ஏற்று கோயிலுக்கு சென்றடைந்தார். சுவாமி தரிசனத்திற்கு பிறகு ஐதராபாத் சென்றார்.

The post ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண் appeared first on Dinakaran.

Tags : Deputy Principal ,Pawan Kalyan ,Anjaneyar Temple ,Tirumala ,Andhra ,Deputy Chief Minister ,Kondagattu ,Andhra Pradesh ,Anjaneya ,Swamy ,Jakityala district of ,Telangana ,Anjaneya temple ,
× RELATED உள்துறையையும் நானே ஏற்பேன்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்