×
Saravana Stores

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் 18 பேர் பங்கேற்பு

 

கோவை, ஜூன் 29: கோவை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் போன்றவைக்கு ஆய்வகங்கள் உள்ளது.

இந்த ஆய்வகங்களை பராமரிப்பதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலா ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் இருந்து வருகிறது. இந்நிலையில், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர்களை பணி இடம் அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யும், தேவை உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்த கலந்தாய்வில் மொத்தம் 18 ஆய்வக உதவியாளர்கள் கலந்துகொண்டு விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.

The post அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் 18 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Labs for Atal Tinkering ,Tech Science ,Language ,Education ,Government Higher Secondary ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பயணிகள்...