கோவை, நவ. 14: குடும்ப உறுப்பினர்கள் என கூறி கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு, பகல் பாராமல் இளைஞர்கள் வந்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த பக்கத்து குடியிருப்புவாசிகள் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.
அதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் உட்பட 3 பேர் கணவன் – மனைவி என கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். பின்னர் சில இளம்பெண்களை வரவழைத்து அங்கு விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது. இது குறித்து சாயிபாபா காலனி போலீசார் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (23), விக்ரம் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை வடவள்ளி தில்லை நகர் 8வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து விபசாரம் நடத்தியது கோவை சுந்தரம் வீதியை சேர்ந்த சீனிவாசன் (37) மற்றும் 3 பெண்கள் என்பது தெரிந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தம்பதி, உறவினர் என கூறி வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல் appeared first on Dinakaran.