×
Saravana Stores

கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிறப்பு சிகிச்சை மையம்

 

கோவை, நவ.16: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவை கொங்குநாடு மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிறப்பு சிகிச்சை மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தினை சீனியர் பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் ஆறுமுகம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

அவருடன் இம்மையத்தின் இயக்குனர் டாக்டர் சங்கர், தலைமை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் எம். புவனப்பிரியா, நிர்வாக இயக்குனரும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி.ராஜு, மருத்துவ இயக்குனர் மற்றும் லேப்ராஸ்கோபிக்அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு மற்றும் அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

The post கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத பாதிப்பு சிறப்பு சிகிச்சை மையம் appeared first on Dinakaran.

Tags : Special Treatment Center for Diabetic Foot Disorders ,Kongu Nadu Hospital ,Coimbatore ,World Diabetes Day ,Kongunadu ,Hospital ,Senior ,Dr. ,Arumugam ,
× RELATED பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பயணிகள்...