×

குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

நாகர்கோவில், ஜூன் 29: குமரி மாவட்டம் காட்டாத்துறை அருகே உள்ள திட்டுமேல்கோணம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராபர்ட் (43). பிரபல ரவுடி. இவர் மீது கொல்லங்கோடு, இரணியல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. சமீபத்தில், தக்கலை போலீசார் கொலை முயற்சி வழக்கில் எட்வின் ராபர்ட்டை கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு, எஸ்.பி. சுந்தரவதனம் கலெக்டர் தருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று, எட்வின் ராபர்ட்டை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

The post குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Kumari ,NAGARGO ,EDWIN ROBERT ,TITUMALKONAM AREA ,KATHATARA, KUMARI DISTRICT ,Rowdy ,Kolangod ,Raial ,Takali ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு