- பெருநகர கவு
- சட்டமன்ற உறுப்பினர்
- விருதசாலம்
- முன்னாள்
- தியாகராஜன்
- இளையராஜா
- மடவலநல்லூர்
- விருதசாலம்
- கடலூர் மாவட்டம்
- அடலராசு
- மேயர் ஆணையர்
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா (47). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி, ஆடலரசு ஆகியோருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி இளையராஜா மணவாளநல்லூரில் உள்ள தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த புகழேந்தி, ஆடலரசு மற்றும் நான்கு பேர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் இளையராஜா படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து புகழேந்தி, ஆடலரசு, ராஜசேகர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கள்ளத்துப்பாக்கி எப்படி ராஜசேகருக்கு கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் கள்ளத்துப்பாக்கி வாங்கியதில் திருவிடைமருதூர் சுயேட்சை கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் திருவிடைமருதுார் பேரூராட்சி சுயேட்சை கவுன்சிலரான திருவிடைமருதூர் வடக்கு எடத்தெருவை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் (30) என்பவரை நேற்று முன்தினம் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.
The post முன்னாள் எம்எல்ஏ மகனை சுட்ட வழக்கு பேரூராட்சி கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.