×
Saravana Stores

கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் 100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி

கரூர், ஜூன் 28: கரூர் மாவட்டம் தேவர்மலை ஊராட்சி ஒன்றியம், கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குளத்தை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்தும் அளித்து தமிழ்நாடு அரசால் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வரூ.கிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரூ.கிறது.அந்த வகையில், தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை வழியாம்புதூர் வடக்கு பகுதியில்ரூ. 13.18 லட்சத்திலும்,

தெற்கு பகுதியில் ரூ 16.67 லட்சத்திலும், கோயம்பள்ளி ஊராட்சியில் 16.67 லட்சத்திலும், புத்தாம்பூர் ஊராட்சி வடுகப்பட்டி மேற்கு ஊராட்சியில் ரூ. 5.70 லட்சத்திலும், மணவாடி ஊராட்சி அய்யம்பாளையத்தில் ரூ. 6.64 லட்சத்திலும் என மொத்தம் ரூ. 51.87 லட்சம் மதிப்பில் 5 புதிய குளங்களும், க.பரமத்தி ஒன்றியம் துக்காச்சி ஊராட்சி வேலாயுதம்பாளையத்தில் ரூ. 24.75லட்சத்திலும், தென்னிலை மேற்கு ஊராட்சி அரிக்காரன்பாளையத்தில் ரூ. 24.23 லட்சத்திலும், கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதியில் ரூ. 26.77 லட்சத்திலும் என மொத்தம் ரூ.75.75 லட்சத்திலும் 3 புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

கிரூ.ஷ்ணராயபுரம் ஒன்றியம் மணவாசி மயானம் அரூ.கில் ரூ.. 8.78 லட்சத்திலும், மாயனுர் காரஞ்சி குளம் அரூ.கில் ரூ. 2.89 லட்சத்திலும், பன்னீர்பட்டி கல்லாக்குத்து அரூ.கில் ரூ. 2.61லட்சத்திலும், சித்தலவாய் ஊராட்சி மேலடையில் ரூ. 3.29 லட்சம் மதிப்பிலும என மொத்தம் ரூ. 17.57 லட்சம் மதிப்பில் 4 புதிய குளங்களும், கடவூர் ஒன்றியம் சுக்காம்பட்டியில் ரூ. 15லட்சத்திலும், சுருமான்பட்டியில். 15லட்சத்திலும், எழுவக்கரியூரில் ரூ. 9.59லட்சத்திலும், கஸ்துரி குரூ.ம்பபட்டி வடவம்பாடியில் ரூ. 9.10 லட்சத்திலும், குனாபபறைபட்டியில் ரூ. 12.10லட்சம் மதிப்பிலு, சின்னதேவன்பட்டியில் ரூ. 9.10 லட்சம் ம திப்பிலும், பாரப்பட்டி வடக்கு பகுதியில் ரூ. 9.10 லட்சத்திலும் என மொத்தம் ரூ. 43.68 லட்சம் ம திப்பில் 3 புதிய குளங்கள் அமைக்கப்படுவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து தோகைமலை ஒன்றியம் கண்ணூத்துப்பட்டி கண்ணூத்துமடையில் ரூ. 18.87 லட்சம் மதிப்பிலும், கள்ள களர்பட்டியில் ரூ. 10.67 லட்சத்திலும் என ரூ. 29.54 லட்சம் மதிப்பில் 2 புதிய குளங்களும் என மொத்தம் 6 ஒன்றியங்களில் 25 புதிய குளங்கள் ரூ. 3.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகள் தரமாகவும், உரிய கால அளவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது, குளித்தலை கோட்டாட்சியர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள பரமேஸ்வரன், ராஜேந்திரன் உடனிருந்தனர்.

The post கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் 100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Kannoothumadai, Kudalur Panchayat ,Karur ,District Collector ,Thangavel ,Department of Rural Development ,Devarmalai Panchayat Union ,Karur District ,Kannoothumatai ,Kudalur Panchayat ,
× RELATED பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை...