×

பல்கலைகழக உபரி ஆசிரியர்களை கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு

 

கரூர், அக்.26: அண்ணாமலை பல்கலைகழகத்தில் உபரி ஆசிரியர்களை அரசு கல்லூரியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து கரூர் அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கிளைத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பார்த்தீபன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அரசு கல்லூரிகளில் மாற்றுப் பணியில் பணியில் அமர்த்தப்பட்ட அண்ணாமலை பல்கலைக் கழக உபரி ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியில் அமர்த்தக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பல்கலைகழக உபரி ஆசிரியர்களை கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur State College of Arts ,Annamalai University ,Government College ,Tamil Nadu Government College Teachers Association ,Danthonimalai ,Dinakaran ,
× RELATED கரூர் பஸ் நிலைய கழிவறையில் இயந்திரம் மூலம் துப்புரவு பணி