- குண்டலம்மன் கோயில் திருவிழா
- சித்தூர் டாப் லைன்
- Kolakalam
- சித்தூர்
- குண்டலம்மன் திருவிழா
- குண்டலம்மன் கோயில் திருவிழா
- சிறந்த
*பக்தர்கள் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி படையலிட்டனர்
சித்தூர் : சித்தூர் டாப் லைன் பகுதியில் குண்டாலம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி படையலிட்டனர்.சித்தூர் டாப் லைன் பகுதியில் குண்டாலம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ெகங்கையம்மனுக்கு காப்பு கட்டி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் நள்ளிரவு 12 மணி அளவில் குண்டாலம்மனின் சிரசு அனைத்து சாலைகளிலும் ஊர்வலமாக சென்று காலை 6 மணிக்கு அம்மனின் சிரசு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடைபெற்றது. மதியம் 3 மணி அளவில் மேள தாளங்களுடன் அம்மனுக்கு கும்பா கூடு சாத்தி படையல் இடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு குண்டாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும். நேற்று காலை முதல் பக்தர்கள் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி தங்களின் நேர்த்திக் கடனான ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிட்டனர். இன்று புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கொண்டாலம்மனின் சிரசு இரக்கம் செய்து ஊர்வலமாக அனைத்து சாலைகளில் வழியாக மேளதாளங்களுடன் வான வேடிக்கையுடன் எடுத்துச் சென்று கெங்கினி ஏரியில் குண்டாலம்மனின் சிரசு ஏரியில் கரைக்கப்படும். நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி கும்ப கூடு படையல் இட்டு வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் தர்மகத்தா முருகேசன் தலைமையில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் சித்தூர் மாநகர மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டாலம்மனை வழிபட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் முதல் வாரத்தில் குண்டாலம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த அம்மனை மனதில் நினைத்து நடக்க வேண்டிய காரியத்தை நினைத்து வணங்கினால் நடைபெறாத காரியங்கள் கூட நடைபெறும். அதேபோல் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.
வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி சச்சரவு நீங்கும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது கண்டிப்பாக மழை பெய்வது அம்மனின் சிறப்பு அம்சமாகும். ஆகவே சக்தி வாய்ந்த குண்டாலம்மன் கோயில் திருவிழாவை காண சித்தூர் மாநகர மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர்.
The post சித்தூர் டாப் லைன் பகுதியில் குண்டாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.