ஆக்ரா: இந்திய விமானப்படை போர் விமானமான மிக்-29, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது திடீரென விமானம் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி, பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்தில், விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து விமானப்படை தனது எக்ஸ் பதிவில், ‘‘சிஸ்டம் கோளாறால் விமானம் விபத்துக்குள்ளானது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பிறகு விமானத்தில் இருந்து விமானி வெளியேறி பத்திரமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 2ம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக்-29 விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போதும் விமானி பத்திரமாக உயிர் தப்பினார். மிக்-29 விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
The post ஆக்ரா அருகே விபத்து; மிக்-29 போர் விமானம் வயலில் விழுந்து எரிந்தது: விமானி உயிர் தப்பினார் appeared first on Dinakaran.