×

எதிர்கட்சிகளுக்கு எதிரான பொய்க்கு மாறாக உண்மையான பிரச்னைகள் குறித்து பேசுங்கள்: பிரதமருக்கு சவால் விடுத்த காங். தலைவர் கார்கே


புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், \”பாஜவின் மக்கள் விரோத கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை அரித்துவிட்டது. எதிர்கட்சிகள் குறித்து பொய் கூறுவதை விட பபிரதமர் மோடி தனது எதிர்கால தேர்தல் பேரணிகளில் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகள் குறித்து பேச வேண்டும். நீங்கள் உருவாக்கிய பொருளாதார குழப்பத்தை பாருங்கள். குறைந்த நுகர்வு, அதிக பணவீக்கம், விரிவடைந்து வரும் சமத்துவமின்மை, குறைந்த முதலீடு மற்றும் ஊதிய தேக்கம் போன்றவற்றால் தத்தளிக்கும் இந்திய பொருளாதாரத்தை பண்டிகை கொண்டாட்டத்தால் கூட உயர்த்த முடியவில்லை.

5 மறுக்க முடியாத உண்மைகள் இருக்கின்றன. உணவு பணவீக்கம் 9.2சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 10.7 சதவீதமாக இருந்த காய்கறி பணவீக்கம் செப்டம்பர் மாதம் 36சதவீதமாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பொருட்கள் துறையின் தேவை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு ஆண்டில் விற்பனை வளர்ச்சி10.1 சதவீதத்தில் இருந்து வெறும் 2.8சதவீதமாக குறைந்துள்ளதாக அரசின் நிதி அமைச்சகத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது. குடும்ப சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதிக உணவு பணவீக்கம் காரணமாக நுகர்வு கடுமையாக குறைந்துள்ளது\\” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post எதிர்கட்சிகளுக்கு எதிரான பொய்க்கு மாறாக உண்மையான பிரச்னைகள் குறித்து பேசுங்கள்: பிரதமருக்கு சவால் விடுத்த காங். தலைவர் கார்கே appeared first on Dinakaran.

Tags : Congress ,PM ,Karke ,New Delhi ,President ,Mallikarjuna Kharge ,Baj ,Babradham Modi ,Kharge ,
× RELATED சொல்லிட்டாங்க…