- முன்னாள் அமைச்சர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- வடக்கு மாநிலங்கள்
- திரு
- விஜய் பாஸ்கர்
- Vijayabaskar
- CBCID
- பேராயர்
- முன்னாள்
- அமைச்சர்
- வட மாநிலங்கள்
- தின மலர்
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க தனிப்படைபோலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்ததுள்ளனர். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 7 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைறைவாக உள்ளார்.
போலி சான்றிதல் குடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற காரணத்தால் சுமார் 12 நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் கரூர் நீதிமன்றத்தில் முஞ்சாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அந்த விசாரணையில் இவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை 18-ம் தேதி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது தலைமறைவாக இருந்து வரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றிருக்களாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சிபிசிஐசி போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றங்களுக்கான ஆவணங்களை திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.