×
Saravana Stores

பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும்: கலெக்டர்

 

கீழக்கரை, ஜூன் 26: திருப்புல்லாணி ஒன்றியம், தினைக்குளம், வண்ணாங்குண்டு ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கேட்டறிந்தார். கலெக்டர் பேசியதாவது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்படும். சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பர். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேலைவாய்ப்பு, நிலையான வருவாய் கிடைக்கும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன், தினைக்குளம் ஊராட்சி துணைத்தலைவர் சிகப்பி, வண்ணாங்குண்டு ஊராட்சி லைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெண்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும்: கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Keezakarai ,Collector ,Vishnu Chandran ,Tirupullani Union ,Dinaikulam ,Vannankundu ,Panchayat ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் தண்ணீர் இன்றி...