×
Saravana Stores

உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழப்பவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்த்தியது தமிழ்நாடு அரசு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசானை பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணியின் போது இறந்த அல்லது காயம் அடைந்த வாக்குச்சாவடி பணியாளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு கருணைத்தொகை இழப்பீடு தொகையை வழங்குவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன,

குண்டுவெடிப்பு தாக்குதல், சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தியுள்ளனர். பிற காரணங்களால் உயிரிழப்பவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தியுள்ளனர். சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.10,000ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

The post உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது உயிரிழப்பவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்த்தியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,
× RELATED பாம்பு கடி தொடர்பான சிகிச்சை...