விழுப்புரம், ஜூன் 25: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் இந்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் – மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் – துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
ஜீவன் ரக்ஷா பதக்கம் – தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரை காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். ற்காணும் 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் 1.10.2022க்கு பின்னர் பல்வேறு நிலைகளில் மனித உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கான விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 26.6.2024க்குள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் அனுப்பிட வேண்டும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ற்கண்ட விருது தொடர்பாக இதர விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.