- எதிர்ப்பு மருந்து விழிப்புணர்வு மாரத்தான்
- தர்மபுரி
- தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட தடகள சங்கம்
- போதைப்பு எதிர்ப்பு விழிப்புணர்வு
- தர்மபுரி மாவட்ட காவல் துறை
- மாவட்ட விளையாட்டு சங்கம்
- தின மலர்
தர்மபுரி, ஜூன் 24: தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட தடகள சங்கம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. தர்மபுரி மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட தடகள சங்கம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய போட்டியை எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் 500 பேர் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் சுபதா ஸ்ரீ, குமுதா, கீர்த்திகா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
ஆண்கள் பிரிவில் லோகேஷ், அன்பரசு, நவீன்குமார் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது, அவர் பேசியதாவது: போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது சிரமமான காரியம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மது, போதை பழக்கம் இருந்தால் உடனே கைவிட முயற்சிக்க வேண்டும். போதை இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்குவோம். பிற நபர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றால், முதலில் தன் மீது அன்பு செலுத்த வேண்டும். அப்போது தான் பிற நபர்கள் மீது அன்பு செலுத்த முடியும். தர்மபுரி மாவட்டத்தில் போதை பொருள், கள்ளச்சாராயம் பதுக்கல் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு எஸ்பி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க தலைவர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, டிஎஸ்பி ரமேஷ், தடகள சங்க செயலாளர் அருவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.