×

விருதுநகரில் சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை

விருதுநகர், ஜூன் 24: விருதுநகர் கலைஞர் நகர் போலீஸ் பாலம் அருகே சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் கலைஞர் நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அருகில் உள்ள அய்யனார் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த நிலையில் கலைஞர் நகர் போலீஸ் பாலம் அருகே இரு பகுதி பொது மக்களும் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இக்குப்பைகள் அருகிலுள்ள நீர்வரத்து ஓடையில் சேர்ந்து நீர்வழிப் பாதையை அடைத்து வருகின்றன. இப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளினால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,“ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை முறையாக பெறுவதில்லை.

வீட்டில் குப்பைகள் சேர்வதைத் தவிர்க்க வேறு வழியின்றி சாலை ஓரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை அகற்ற புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை எனவே குப்பைகளை முறையாக பெறுவதற்கும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post விருதுநகரில் சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Police Bridge ,Artist Nagar ,Virudhunagar Kalainar Nagar ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...