×
Saravana Stores

அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை

 

விருதுநகர், அக்.21: அவரையில் காய்ப்புழு நோய் தாக்குதல் ஏற்பட்டால் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், அவரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது அவரை அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. இக்காயில் தற்போது காய்ப்புழுத் தாக்குதல் ஏற்பட்டு, செடியிலேயே வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, காய்ப்புழுத் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் குளோரி பைரிபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவிலும், தாக்குதல் அதிக அளவு இருந்தால் டிசைடர் மருந்து 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து இரண்டு மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும். தாக்குதல் புழுவின் பரிணாமம் முட்டை, புழு என பல்வேறு கட்டங்களாக இருப்பதால் லார்வின் மருந்தை 10 லிட்டர் நீருக்கு 20 கிராம் கலந்து தெளித்து வந்தால் இந்நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்றனர்.

The post அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar district ,
× RELATED 24ம் தேதி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்