×

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

 

காட்டுமன்னார்கோவில், ஜூன் 24: காட்டுமன்னார்கோவில் அடுத்த புத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மானியம் ஆடூர் கிராமத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில் விற்கப்படுவதாக புத்தூர் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேத்தியாத்தோப்பு சரக காவல் உதவி கண்காணிப்பாளர் ரூபன்குமார் உத்தரவின்பேரில் உதவி காவல் ஆய்வாளர் ஜெயசீலி மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணியளவில் மானியம் ஆடூர் மாரியம்மன்கோவில் தெரு பகுதியில் நோட்டமிட்டபோது அதே கிராமத்தில் 3 இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பது தெரியவந்தது.

இதையடுத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மானியம் ஆடூர் பெரிய தெருவை சேர்ந்த தம்புசாமி மகன் சுதாகர்(42), அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் அம்பேத்(47) மற்றும் மேட்டுதெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சத்யராஜ்(28) ஆகிய 3 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.5655 மதிப்புள்ள 180 மி.லி அளவு கொண்ட 39 பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சேத்தியாத்தோப்பு உட்கோட்ட பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை நடக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தபட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு டிஎஸ்பி ரூபன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Puttur police station ,Adur village ,Puttur ,Assistant Superintendent ,Chetiathoppu Goods Police ,Ruban Kumar ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை