- விக்கிராவண்டி இடைக்கால தேர்தல்
- விக்ரிவண்டி
- விலப்புரம் மாவட்டம்
- விக்ராவண்டி சட்டமன்றத் தொகு
- விக்கிரவாண்டி
- தேர்தல்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்aடியிட அளித்துள்ள வேட்பு மனுக்கள் மீது நாளை 24ம் தேதி பரிசீலனை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடைந்தது. விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சந்திரசேகர் வேட்பு மனுக்களை பெற்றார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 64 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை 24ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாள் ஆகும். விக்கிரவாண்டி ெதாகுதியில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தல் அலுவலகம் திறந்து தங்கள் பிரசாரத்தை விக்கிரவாண்டியில் இருந்து தொடங்கியுள்ளனர். அதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் ஆங்காங்கே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை அல்லது நாளை மறுநாள் சூடு பிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை appeared first on Dinakaran.