×

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் எச்.ராஜா உட்பட பாஜவினர் 133 பேர் கைது

மதுரை, ஜூன் 23: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய எச்.ராஜா உட்பட பாஜ கட்சியினர் 133 பேர் கைதாயினர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே பாஜ கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறிய போலீசாருடன், பாஜவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட 133 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

The post அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் எச்.ராஜா உட்பட பாஜவினர் 133 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : H. Raja ,Madurai ,BJP ,Kallakurichi ,Madurai Collector ,Madurai… ,
× RELATED தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம்...