×

நாட்டின் பிரதமரே திராவிடர்தான்: எச்.ராஜா புது உருட்டு

வேலூர்: வேலூரில் பாஜ உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் உள்ள தூர்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டுவிட்டது. இது பாடியவர்களின் பிழை. அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரை தரம் தாழ்த்தி பேசுவது தவறு.

திராவிடம் என்பது இடத்தை குறிக்கும், இனத்தை அல்ல. நாட்டின் பிரதமரே திராவிடர் தான். மாநில அரசு அதன் வரம்பை மீறி செயல்படும் போது, ஒன்றிய அரசு மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவை விட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரண்டரை சதவீதம் வாக்குகள் தான் குறைவு. வாக்கு சதவீதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 3வது இடத்துக்கு வந்துள்ளது. இது வருகிற சட்டமன்ற தேர்தலில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாட்டின் பிரதமரே திராவிடர்தான்: எச்.ராஜா புது உருட்டு appeared first on Dinakaran.

Tags : H. Raja Pudu Urrutu ,Vellore ,BJP ,BJP Coordination Committee ,President ,H. Raja ,Doordarshan festival ,Chennai ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...