×

மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை

தாம்பரம்: வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வருவதை பெற்றோர் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர், மேம்பாலத்திலிந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் அருகே உள்ள பட்டேல் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (23). பி.காம் பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு செல்வதால் அவரது பெற்றோர்களுடன் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவரிடம், வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வருவதையே வாடிக்கையாக வைத்திருந்ததற்காக பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாதவன் தாம்பரம் மேம்பாலத்திற்கு நடந்தே சென்றார். 50 அடி உயரத்தில் இருந்து குதித்ததால், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Madhavan ,Patel Nagar ,Tambaram. B.Com ,
× RELATED திருவாலங்காடு அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் கவரிங் செயின் பறிப்பு