திங்கள்சந்தை, ஜூன் 21: களியக்காவிளை அருகே மேக்கோடு புன்னகாலவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (49). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 15ம் தேதி வேலைக்கு சென்றவர் 16ம் தேதி காலை பைக்கில் வீடு திரும்பினார். காரவிளை பகுதியில் வந்த போது எதிரே வேகமாக வந்த கேரளா அரசு பஸ், ஜஸ்டின் ராஜ் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜஸ்டின் ராஜுக்கு பின் தலையிலும், வலது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜஸ்டின் ராஜ் சிகிச்சை பெற்றார். சுய நினைவு திரும்பாத நிலையில் மருத்துவர்கள் ஜஸ்டின் ராஜுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜஸ்டின் ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜஸ்டின் ராஜியின் மனைவி ஷீஜா அளித்த புகாரின் பேரில், கேரள அரசு பஸ்சை ஓட்டி வந்த ஆலப்புழா மாவட்டம் அரிப்பாடு அடுத்த வெட்டுவேனி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (46) மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரள அரசு பஸ் மோதி படுகாயம் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பாிதாப சாவு appeared first on Dinakaran.